

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே திருச்செங்கோட்டில் கலை கட்டத் தொடங்கிய தேர்தல் திருவிழா நகரின் முக்கிய பகுதிகளில் கண்டா வர சொல்லுங்க நாமக்கல் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரை கண்டால் வரச் சொல்லுங்க என்கிற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பொதுமக்கள் என்கிற பெயரில் அச்சகத்தின் பெயரும் இல்லாமல் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களை ஒட்டியது யார் என்பது குறித்து பொதுமக்களிடையே பரபரப்பாக பேசபட்டு வருகிறது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் ஒதுக்கியதால் திமுகவில் இருக்கும் அதிருப்தியாளர்கள் ஒட்டியதா அல்லது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தேர்தலுக்குப் பின் தாழ்த்தப்பட்ட அரிஜன மக்களை கண்டுகொள்ளவில்லை என்கிற அதிருப்தியில் இருக்கும் மக்கள் ஒட்டியதா என போஸ்டரை பார்த்து செல்பவர்கள் பேசிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

