• Fri. May 3rd, 2024

குமாரபாளையம் நகராட்சியின் கூட்டத்தில் குப்பைகளும், சாக்கடை கால்வாய்களும் தூர்வார வேண்டும் என திமுக, அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை…

ByNamakkal Anjaneyar

Feb 27, 2024

குமாரபாளையம் நகராட்சியின் சாதாரண கூட்டத்தில், பாராளுமன்றத் தேர்தல் வர உள்ளதால் தங்கள் வார்டு பகுதிகளில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் குப்பைகளும், சாக்கடை கால்வாய்களும் தூர்வார வேண்டும் என திமுக, அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியின் நகரமன்ற சாதாரண கூட்டம் நகராட்சி ஆணையாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமார் 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்பொழுது நகர் மன்ற தலைவர் குமாரபாளையம் நகராட்சி பகுதிக்கு வாரச்சந்தை திடல் கட்டுவதற்காக மற்றும் குமாரபாளையம் பேருந்து நிலையத்தை புதுப்பிப்பதற்காகவும் தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு 10 கோடி ரூபாய் ஒதுக்கி திட்ட பணிகள் நடைபெற அடிக்கல் நாட்டியதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு அனைவரும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற துணை தலைவர் வெங்கடேசன் பேசும் பொழுது வருகின்ற பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் வேட்பாளர்கள் வாக்குகள் சேகரிக்க ஊருக்குள் செல்ல வேண்டி உள்ளதால் நகராட்சி பகுதியில் உள்ள குப்பைகளையும் சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றார். அதற்கு அதிமுகவின் நகர மன்ற குழு தலைவர் பாலசுப்பிரமணி பேசும் பொழுது இதில் அதிமுக திமுக என்ற கட்சி பேதங்கள் இன்றி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இரு தரப்பினரும் வேட்பாளர்களை வார்டு பகுதியில் அழைத்து செல்லும் பொழுது பொதுமக்கள் வேட்பாளர்களை முற்றுகை இடக் கூடும் எனவே குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டு பகுதிகளிலும் சாக்கடை கால்வாய்களை தூர்வாரி குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று ஒருமனதாக கேட்டுக் கொண்டனர் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நகர மன்ற தலைவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மன்ற கூட்டம் முடிவு அடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *