• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புளியங்குடியில் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை பணியிடத்தில் பிரச்சனையா குடும்பத்தில் பிரச்சனையா என போலீசார் தீவிர விசாரணை

Byஜெபராஜ்

Jun 22, 2024

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புளியங்குடி டிஎன் புதுக்குடி சிவராமு நாடார் ஒன்றாம் தெருவை சேர்ந்த ரவிக்குமார் மனைவி உமாதேவி வயது (42) இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சுமார் எட்டு ஆண்டுகளாக 11ஆம் வகுப்பிற்கு பாட்டனி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு அவிநாசிங் (9 )வேலவிமாசிங் என்ற இரு மகன்கள் உள்ளனர் இவர் நேற்று காலையில் பள்ளிக்கு சென்ற உமாதேவி மதியம் விடுப்பு கேட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்பு 4.30 மணி அளவில் அவரது கணவர் ரவிக்குமார் வீட்டுக்கு சென்று பார்த்த போது உமாதேவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பின்பு புளியங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பெயரில் புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேதப் பரிசோதனைக்குஅனுப்பி வைத்தனர். உமாதேவி தற்கொலைக்கு குடும்பத்தில் ஏதும் பிரச்சனையா அல்லது பள்ளியில் பிரச்சனையா என பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.