• Sun. Sep 24th, 2023

கவிஞர் காமகோடியன் காலமானார்

தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞருமான காமகோடியன் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 76. தமிழ்த் திரையுலகில் 1980களில் பிரபலமாக இருந்த பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர் கவிஞர் காமகோடியன். இவர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா என 3 தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் எழுதி புகழ் பெற்றார். குறிப்பாக, கடந்த 2002ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘மெளனம் பேசியதே’ படத்தில் இவர் எழுதிய’௭ன் அன்பே ௭ன் அன்பே’ பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

கடைசியாக இவர், கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘திருட்டு ரயில்’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதினார். அதன்பின் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த காமகோடியன் இன்று காலமானார். கவிஞர் காமகோடியன் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *