• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சத்தீஸ்கரில் ஓய்வூதியதாரர்களுக்கான பென்ஷன் தொகை அதிரடி உயர்வு..!

Byவிஷா

May 1, 2023
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஓய்வுதியதாரர்களுக்கான பென்ஷன் தொகை அதிரடியாக உயர்த்தியுள்ளது அம்மாநில அரசு. 
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கான அகல விலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அண்மையில் ராஜஸ்தான், பீகார்,ஹரியானா மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநில அரசுகள் நான்கு சதவீதம் அகலவிலைப்படியை உயர்த்தி அறிவித்தது. இதனால் அரசு ஊழியர்களின் சம்பளமும் வெகுவாக உயர்ந்தது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில அரசு தனது ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் 35 ஆயிரம் ரூபாயிலிருந்து 58 ஆயிரத்து 300 ரூபாயாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே ரயில்வே அல்லது விமான பயணத்திற்கு தற்போதுள்ள உதவி தொகை 8 லட்சம் என்பதிலிருந்து ஆண்டுக்கு 10 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதிய தொகை உயர்வால் அரசுக்கு ஒரு ஆண்டில் 6.80 கோடி நிதிச் சுமை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.