விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய இண்டிகா ஃபேப்ரிக்ஸ் ரெடிமேட் ஆடை தயாரிக்கும் நிறுவனம் தீபாவளி திருநாளை முன்னிட்டு தனது நிறுவனத்தில் நேர்மையுடன் விசுவாசத்துடன் பணிபுரியக்கூடிய 30 ஊழியர்களை கண்டறிந்து அவர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் இனிப்புகள் வழங்கி புதிய மின்சார இருசக்கர வாகனம் வழங்கினார்கள்.

நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பணியாளர்களுக்கு நிறுவனத்தின் இயக்குனர் ஏ .நசீர் முகமது முன்னிலையில் நிறுவனத்தில் பங்குதாரர்களான கனிஷ்க் விஷ்வா .மற்றும் கனிஷ்க் தேஜஸ்வினி ஆகியோர் மின்சார இருசக்கர வாகனங்களை வழங்கினர்.இந்த மின்சார இரு சக்கர வாகனம் நவீனமானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதால் இது வழங்கியதாக பங்குதாரர்கள் தெரிவித்தனர்.

இதை பெற்றுக்கொண்ட ஊழியர்கள் நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். திடீரென நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட இந்த தீபாவளிக்கு மின்சார இரு சக்கரம் வாங்கியது பெரிய மகிழ்ச்சி அளிப்பதாகவும் தொடர்ந்து நிர்வாகத்திற்கு உறுதுணையாக பணியாற்றுவோம் எனவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
