• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

‘How do I tell you’ என்ற வடிவேலு பாணியில் யானையிடம் கதறும் வீட்டின் உரிமையாளர்

Byமதி

Dec 15, 2021

கேரளாவில் ஒரு வீட்டின் ஜன்னலை உடைத்து அட்டகாசம் செய்துள்ளது ஒரு யானை.

யானை தனது சமையல் அறையை தும்சம் செய்வதை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்குகிறார் வீட்டின் உரிமையாளர். பதற்றத்தில் யானையைப் பார்த்து மலையாளத்தில் பேசுகிறார்.. தீடிரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை ஹிந்தியில் பேச ஆரம்பிக்கிறார். ஆனால் யானை எதற்கும் அசைந்த பாடில்லை. இறுதியில் பாத்திரங்களை தட்டி ஓசை எழுப்புகிறார். ஆனால் அந்த வீட்டின் சமையல் அறையில் எதையோ தேடிக்கொண்டே இருக்கிறது யானை…

என்ன தேடியது.. தன் தேடிய பொருள் அந்த யானைக்கு கிடைத்ததா.. இல்லை வீட்டின் உரிமையாளர் அந்த யானையைத் துறத்தினாரா என்று எல்லாம் தெரியவில்லை.. அதற்க்குள் அந்த வீடியோ முடிந்துவிட்டது.

பாவம் அந்த வீட்டின் உரிமையாளர்.. நீங்க அந்த வீட்டின் உரிமையாளராக இருந்தால் என செய்து இருப்பீங்க.. உங்க கருத்துக்களை comment box ல பதிவு செய்யுங்க..