• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வாக்களிக்க வராதவர்.. நண்பரின் இல்ல திருமண விழாவில்.. இணையத்தில் எழும் விமர்சனங்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர், கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர் அன்புசெழியனின் இல்ல திருமண விழா இன்று காலை நடைபெற்றது! திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் பலர் கலந்துகொண்டனர்!

திருமண விழாவில், தமிழ் சினிமா பிரபலங்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தயாரிப்பாளர் போனிகபூர், பிரபு, விக்ரம் பிரபு, விஜய் ஆண்டனி, வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் தாணு, தேனாண்டாள் முரளி, அருள்பதி, எல்ரெட்குமார், நடிகர் நாசர், அம்மா சிவா, மனோபாலா, மயில்சாமி, இயக்குநர்கள் N.லிங்குசாமி, சுசிகணேசன், சரண், நடிகர் வைபவ், சுப்பு பஞ்சு, ரோகிணி தியேட்டர் பன்னீர் செல்வம் ஆகிய பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்தினர்.

தங்கம் தென்னரசு, சேகர் பாபு, TTV.தினகரன், SV.சேகர், ராணிபெட் காந்தி, கு. பிச்சாண்டி, V V ராஜன் செல்லப்பா, R B உதயகுமார், வாணதி சீனிவாசன், செல்லூர் ராஜு, SP வேலுமணி, ஜெயக்குமார், LK சுதீஷ் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் நேரில் சென்று வாழ்த்தினர்.

அன்புச்செழியன் இல்ல திருமண விழாவில் ரஜினி கலந்துக்கொண்டார். இதன் வீடியோ மற்றும் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியானது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் ரஜினிக்கு ஓட்டளிக்க வரவில்லை.. ஆனால் சினிமா பைனான்சியர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்ள மட்டும் வந்திருக்கிறாரே என விமர்சித்து வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிக்க ரஜினி வரவில்லை. ரஜினி ஓட்டளிக்க வருவார் என காலை முதலே ரசிகர்கள், பத்திரிக்கையாளர்கள் என போயஸ் கார்டன் முதல் ஓட்டுச்சாவடி வரை காத்து கிடந்தனர். ஆனால் கடைசி வரை ரஜினி வரவேயில்லை. ரஜினி ஊரில் இருந்தும் ஓட்டளிக்க வராதது பற்றி அப்போதே சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில் இன்று ரஜினி மட்டுமல்ல. அவரை போல் வாக்களிக்காமல் இருந்த பலரும் அன்புச் செழியன் இல்லத் திருமணத்தில் கலந்துக்கொண்டனர். ஓட்டு போட வராமல் அன்புச் செழியன் இல்ல திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இடைவெளியில் வந்து கலந்து கொண்ட பிரபலங்களை தேடி பிடித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.