சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி திண்டுக்கல் சாலையில் கிருங்காக்கோட்டை பிரிவு சாலை அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது வேகமாக வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து.
சிங்கம்புணரி தேத்தாங்காடு பகுதியை சேர்ந்தவர் சேக் அப்துல்லா (வயது 65) தனது வியாபாரத்தை முடித்து விட்டு கிருங்காக்கோட்டை பிரிவு சாலை அருகே இருள் சூழ்ந்த பகுதியில் வந்துள்ளார். அப்போது நத்தம் பகுதியில் இருந்து தனியார் கல்லூரி பேருந்தை நத்தம் பகுதியை சேர்ந்த வீரனன் என்பவர் மாணவர்களை ஏற்றிக் கொண்டு சிங்கம்புணரி பேருந்து நிலையத்தை நோக்கி வேகமாக வந்தகொண்டிருந்தார்.
அப்போது கிருங்காகோட்டை பிரிவு சாலை அருகே சேக் அப்துல்லா இன்று இரவு 7 மணியளவில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது வேகமாக வந்த தனியார் பேருந்து சேக் அப்துல்லா மீது வேகமாக மோதியது. அதில் சேக் அப்துல்லா பலத்த காயம் அடைந்தார்.
அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் தகவல் கொடுத்து அவரை மீட்டு சிங்கம்புணரி தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுவி அளிக்கப்பட்டு கவலை கிடமான நிலையில் மதுரை இராஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்துகாவல் ஆய்வாளர் மனோகரன். சார்பு ஆய்வாளர் குகன் ஆகியோர் பேருந்து கண்ணாடி உடைந்த துகள்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து சிங்கம்புணரி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.