தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாக தீவிரமாக பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெறுக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று முதல் தென்காசி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தர்ராஜ் அறிவித்துள்ளார்.