• Wed. Jun 26th, 2024

குமரியில் உள்ள நாட்டுப்படகுகளின் எண்ணிக்கை மட்டுமே 8000 அரசின் மானியம் மண்ணெண்ணை கேட்டு கோரிக்கை

கச்சத்தீவு பிரட்சனை தேர்தலுக்கு மட்டும் பேசப்படுகிறது, இரு நாட்டு மீனவர்களுக்கும் கச்சத்தீவு எல்லையில் மீன் பிடிக்க அனுமதி வழங்க அங்கு ஆய்வு நடத்த வேண்டும் எனவும், மேலும் தமிழ்நாடு அரசு, தமிழகம் முழுவதும் 6000 படகுகளுக்கு மானியத்தில் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். ஆனால் குமரி மாவட்டத்தில் மட்டுமே 8000 படகுகள் அனைத்து படங்களுக்கும் மானிய விலையில் மண்ணெண்ணெய் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். எனவே மீன்வளத் துறையினர் சரியான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். தேங்காய் பட்டிணம் மீன்பிடி துறைமுக கட்டு மான பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குமரிமாவட்ட மீன் தொழிலாளர் சங்க பயிற்சி முகாமில் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்,கடல் சார் மீனவர்கள் மற்றும் உள்நாட்டு மீனவர்களுக்கான கருத்தரங்கு குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் பயிற்சி முகாமாக நடைபெற்றது ,இதில் ஏராளமான சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர்.சகாய பாபு கூறுகையில்” கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதேபோன்று மீனவர்களுக்கு வழங்கப்படுகின்ற மானிய மண்ணெண்ணையை அனைத்து மீனவர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தமிழக அரசு ஒரு கணக்கெடுப்பில் 6000 படகுகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் குமரி மாவட்டத்தில் மட்டுமே 8000 படகுகள் உள்ளன. எனவே தவறான கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அனைத்து படகுகளுக்கும், மானிய மண்ணெண்யை வழங்க வழிவகை செய்ய வேண்டும்,தெளிவான ஆய்வை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர், அதேபோன்று கட்சி தீவு பிரச்சனையை பொறுத்தவரையில் தேர்தல் நேரத்தில் மட்டும் பேசப்பட்டு வருகிறது. எனவே கச்சத்தீவு எல்லையில் இரு நாட்டு மீனவர்களும் தொழில் நடத்துவதற்காக அரசு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *