• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47 கோடியை தாண்டியது..!

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 40.04 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 408,100 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470,047,191-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 69,497 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில் இதுவரை 400,428,845 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 63,520,316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 562 பேர் கொரோனாவால் பலியான நிலையில் இதுவரை உலகம் முழுவதும் 6,098,030 பேர் உயிரிழந்துள்ளனர்.