கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கோடை விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கோடைவிழா நேற்று காய்கறிகண்காட்சியுடன்துவங்கியுள்ளது
கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் துவங்கிய நீலகிரி கோடை விழாவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர தொடங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை உற்சாகப்படுத்தவும் தோட்டக் கலைத்துறையின் சார்பில் மே மாதத் தில் கோடை விழா நடத்தப்படுகிறது. இதில், காய்கறி காட்சி, வாசனை திரவிய காட்சி, ரோஜா காட்சி, மலர் காட்சி, பழக்காட்சி போன்று பல் வேறு விதமான கண்காட்சிகள் நடத்தப்படு கின்றன. கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கோடை விழா நடைபெறவில்லை. தற்போது கோடை விழா வின் ஆரம்பமாக சனியன்று கோத்தகிரி நேரு பூங்காவில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமை யில் 11 ஆவது காய்கறி கண்காட்சி தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்க ளின் காய்கறி வளங்களை பறைசாற்றும் வித மாக பல்வேறு காட்சி திடல்களை அமைத்து அனைத்து விதமான காய்கறிகளும் காட்சிப் படுத்தப்பட்டன. மேலும் குழந்தைகள், பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரை யும் கவரும் வகையில் சுமார் ஒன்றரை டன் கேரட், 600 கிலோ முள்ளங்கியினை கொண்டு ஒட்டக சிவிங்கி (குட்டியுடன்) அமைக்கப்பட்டது. மேலும், பல்வேறு காய்கறியை கொண்டு மீன், கிடார், கடிகாரம், உதகையின் 200 ஆவது ஆண்டினை போற்றும் வகையில் “உதகை 200” போன்ற வடிவங்களும் மயில், முதலை, கிளி, கங்காரு, பாண்டா போன்ற விலங்குகளின் வடி வங்களும் அமைக்கப்பட்டிருந்தன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததுடன், புகைப் படங்களும் எடுத்துக்கொண்டனர். மேலும், காய்கறி கண்காட்சியை தொடர்ந்து நடைபெற உள்ள ரோஜா காட்சி, பழக்காட்சி போன்ற அனைத்து கண்காட்சிகளையும் பொது மக்கள் அனைவரும் கண்டு ரசிக்குமாறு தோட் டக்கலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வா கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.