அலோபீசியா எனும் நோயால் பாதிக்கப்பட்டு மொட்டை தலையுடன் காணப்படும் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித் குறித்து ஆஸ்கர் மேடையில் தேவையற்ற கமெண்ட் அடித்த காமெடி நடிகர் கிறிஸ் ராக்கை வில் ஸ்மித், மேடை ஏறி அவரை அறைந்தது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.
ஆஸ்கர் குழு இதுதொடர்பாக வில் ஸ்மித்திடம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சொன்ன நிலையில், நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் குழுவில் இருந்து விலகுகிறேன் என இரண்டாவது முறையாகவும் மன்னிப்பு கேட்டு விட்டார்
இந்நிலையில், அந்த அறையின் எதிரொலியாக நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் வில் ஸ்மித் நடித்து வந்த Fast and Loose திரைப்படத்தின் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டு விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. வில் ஸ்மித் அப்படி நடந்து கொண்டதில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கும் வருத்தம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த ஒரு நிமிட கோபத்தின் காரணமாக வில் ஸ்மித் இன்னும் என்னவெல்லாம் பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார் என்பது தெரியவில்லை என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.