• Thu. Mar 30th, 2023

மதுரை சம்பவத்திற்க்கு ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம் . அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி !

By

Aug 29, 2021 ,

மதுரை நாராயணபுரம் பகுதியில் ஏற்பட்ட மேம்பால விபத்து பகுதியினை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ,மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பேசியபோது :

சாகர்மாலா திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டம், 3ஆண்டுகாலமாக நடைபெறுகிறது.

 

இருப்பினும் , அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முடிவடையும் நிலையில்

மேம்பால விபத்து தவிர்க்கப்பட வேண்டியது, ஒப்பந்ததாரரின் அஜாக்கிரதையாலயே முழுக்க முழுக்க இந்த விபத்து நடந்துள்ளது, பாலம் இணைப்பு பணியின் போது ஹெரிடரை இணைக்கும் போது ஹைட்ராலிக் இயந்திரம் பழுது காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது, 160டன் ஹெரிடரை தூக்கி நிறுத்த 200டன் ஹைட்ராலிக் பதிலாக குறைவாக பயன்படுத்தபட்டது என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம் எனவும், இது பாதுகாப்பற்ற நிலையில் செயல்படுத்தியதன் காரணமாக நடைபெற்றுள்ளது என தெரிவித்தார்.

திருச்சி பாஸ்கர் தலைமையிலான குழு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதாகவும்
விபத்தில் உயிரிழந்தவருக்கு நிதியுதவி அளிப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்

என தெரிவித்தார் .விசாரணை குழுவானது பாலத்தின் பணிகளை முழுமையாக ஆய்வு செய்யும் என்றார் .

விபத்து வரும் அறிக்கையை பொறுத்து, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகளை எடுப்பார் .

 

திமுக அரசு அமைந்த பின் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்ய அரசு சார்பில் தர பரிசோதனை குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக அதிகாரிகளுக்கு நோட்டிஸ் அனுப்பியதால் ஒப்பந்தங்களையும் ரத்து செய்து நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்

என தெரிவித்தார் .

தமிழகத்தில் இனி நடைபெறும் பாலம் , சாலை பணிகள் நடைபெறும் பகுதிகளில் LOG ஷீட் முறையை நடைமுறைப் பயன்படுத்தி பணிகளின் போது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து பணிகளை தொடர்வோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *