• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

ஆன்லைன் சூதாட்டம் பற்றிப் பேச வரும் ‘விழித்தெழு’ திரைப்படம்

ஆதவன் சினி கிரியேஷன் தயாரிப்பில் தயாரிப்பாளர் சி.எம்.துரை ஆனந்த் தயாரித்துள்ள படம் ‘விழித்தெழு’. கதாநாயகனாக ‘முருகா’ அசோக், கதாநாயகியாக காயத்ரி ரெமோ, ‘பருத்தி வீரன்’ சுஜாதா, சரவண சக்தி, வினோதினி, வில்லு முரளி, ரஞ்சன், சேரன் ராஜ், மணிமாறன், சாப்ளின் பாலு, சுப்பிரமணியபுரம் தனம், ‘நெஞ்சுக்கு நீதி’ திருக்குறளி, காந்தராஜ், அறிமுகம் ‘லட்டு’ ஆதவன், கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் சி.எம்.துரை ஆனந்தும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இசை :நல்லதம்பி,
ஒளிப்பதிவு :இனிய கதிரவன், ஆ.சம்பத்குமார். கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்: தமிழ்செல்வன்.படத்தில் மூன்று பாடல் காட்சிகள் மிகவும் பிரமாண்டமான முறையில் அமைந்துள்ளன.மதுரை மற்றும் சிவகங்கை சுற்றுப் பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழா அண்மையில் நடந்தது. மூத்த இயக்குநரான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியரான கோபால் ஆகியோர் ட்ரெய்லரை வெளியிட்டனர்.
ஆன்லைன் சூதாட்டம் பற்றிப் பேச வந்திருக்கும் இந்தப் படம், காலத்துக்கேற்ற ஒரு படைப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.