கல்வி என்பது நம் தேவை மட்டுமல்ல.. அது நம் உரிமையும்கூட…’ என்பதை கமர்சியல் கலந்து பேசியிருக்கிறது இந்த ‘காலேஜ் ரோடு’ திரைப்படம்.
MP எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பிரவீன் மற்றும் சரத், மற்றும் ஜனா துரைராஜ் மனோகர் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் லிங்கேஷ், மோனிகா, ஆனந்த்நாகு, KPY அன்சர், அக்சய் கமல், பொம்மு லஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அருவி பாலா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஜெய் அமர்சிங், ஒளிப்பதிவு – கார்த்திக் சுப்ரமணியம், படத் தொகுப்பு – அசோக் ஹெச்.அந்தோணி, இணை இயக்கம் – சேகர், சண்டை இயக்கம் – பி.சி., நடன இயக்கம் – விஜி,
சென்னையில் மிகப் பெரிய கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக சேர்கிறார் லிங்கேஷ். அப்போது, வங்கிகளின் பாதுகாப்பை மேன்மைப்படுத்தும் ப்ராஜெக்ட் ஒன்றை உருவாக்கும் லிங்கேஷ் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார்.அதே சமயம் சென்னையின் முக்கிய வங்கிகளில் கொள்ளைகள் நடக்கின்றன. ஒருபுறம் அதற்கான விசாரணைகள் நடக்கின்றன. நாயகன் லிங்கேஷூக்கும், வங்கி கொள்ளை சம்பவங்களுக்கான லீட் எப்படி வருகிறது என்பதையும், வங்கிக் கொள்ளைக்கான காரணம் என்ன என்பதையும், தற்போது கல்வித் துறை எப்படியானவர்களின் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும் பல அதிரடி திருப்பங்களோடு விரிவாக பேசுகிறது இந்தப் படத்தின் திரைக்கதை.
முதன்மை நாயகனாக லிங்கேஷ்
நாயகியாக மோனிகா நடித்திருக்கின்றனர்
லிங்கேஷின் கிராம நண்பர்களாக வரும் நால்வரும் நல்ல தேர்வு. கல்லூரி நண்பராக வருபவரின் கேரக்டரும், அவரின் நடிப்பும் அருமையாக அமைந்துள்ளது. காமெடிக்கென தனி ட்ராக் இல்லாமல் கதையுடனேயே இணைத்துள்ளார் இயக்குநர். காமெடியில் ஒருவர் மட்டும் நம் கவனத்தை ஈர்க்கிறார்.
யூத்புஃல்லாக ஆரம்பிக்கும் முன் பாதியில் ஒளிப்பதிவாளர் வண்ணங்களை அழகாக இணைத்து விஷுவலாக படத்திற்கு எனர்ஜி ஏற்றியுள்ளார். இசை அமைப்பாளர் தன் வேலை கச்சிதமாக கொடுத்துள்ளார். படத்தில் வரும் மிக முக்கியமான ப்ளாஸ்பேக் சீக்வென்ஸில் பின்னணி இசை அருமையாக அமைந்துள்ளது.சிறிய பட்ஜெட்டிலும் இவ்வளவு பிரம்மாண்டத்தையும் நம்பகத் தன்மையையும் மேக்கிங்கில் கொண்டு வந்தது நிச்சயமாக ஒரு ஆச்சர்யமான விஷயம்தான்.
ஒரு நல்ல கருத்தை தாங்கி வந்துள்ள இந்த ‘காலேஜ் ரோடு’ நிச்சயமாக பார்க்க வேண்டிய படம்.
- சேது – நிறைவேறாத நல்ல கனவாகவே இருக்கட்டும் ?சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் பொது வெளியின் பேசு பொருளாகவந்துள்ளது. உச்ச நீதி மன்றத்திற்கு இந்திய […]
- அழகின் அழகே குளிர்கால டிப்ஸ்..குளிர்காலத்திற்கான சிறந்த பராமரிப்பு குறிப்புகள் நீங்கள் வசிக்கும்இடம் மற்றும் ஆண்டின் எந்த மாதத்தை பொறுத்து குளிர்காலம் […]
- ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என்ற அச்சத்தில் திமுகவினர்… அதிரடியாய் வெடித்த கே.டி.ராஜேந்திரபாலாஜிஅதிமுக நிறுவன தலைவர் தமிழர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் தமிழகம் […]
- தை தெப்பத் ஏழாம் நாள் திருவிழா திருப்பரங்குன்றம் முருகனுக்கு தீப தூப ஆராதனைதை தெப்பத் திருவிழா ஏழாம்நாள் இன்று இரவு அருள்மிகு சுப்பிரமணியசாமிக்கும், தெய்வானைக்கும் தீபாராதனை நடைபெற்ற காட்சி
- அனுமதியின்றி மரக்கடத்தல்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மரங்களை தொடர்ந்து அனுமதியின்றி […]
- அகில இந்திய மஜ்லிஸ் சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு […]
- புதிய ஓய்வுதிய திட்ட எதிப்பு “கோரிக்கை மாநாடு” பிப்ரவரி 11ல் சென்னையில் நடக்கிறது.சென்னையில் நடைபெற உள்ள புதிய ஓய்வூதிய திட்ட எதிர்ப்பு கோரிக்கை மாநாடு குறித்த செய்தியாளர் சந்திப்பு […]
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 103:ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால்சிறியிலை வேம்பின் பெரிய கொன்றுகடாஅம் செருக்கிய […]
- பொது அறிவு வினா விடைகள்
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு குருவிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.“என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.என் பணியாட்கள்கூட […]
- குறள் 367:அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினைதான்வேண்டு மாற்றான் வரும். பொருள் (மு.வ):ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் […]
- மாரடைப்பு… வகுப்பறையிலேயே உயிரிழந்த 11ம் வகுப்பு மாணவிமத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 11-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே உயிரிழந்த […]
- நாகர்கோவில்- நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா கொடியேற்றம்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரசதிபெற்ற நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது .கன்னியாகுமரி மாவட்டம் […]
- பேருந்தில் அபாயகரமான பயணம்… பள்ளி மாணவர்கள் சாகசம்..!!நீலகிரி மாவட்டம் பள்ளி மாணவகள் அபாயகரமான பயணம் மேற்கொள்கின்றனர்கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள்கோரிக்கைநீலகிரி மாவட்டம் கூடலூர் […]
- மாணவ மாணவிகளுக்கு உடல்நல குறைவு -விஜய் வசந்த எம்பி.ஆறுதல்கன்னியாகுமிரியில் என்.எஸ்.எஸ் முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் உடல் நலக்குறைவு விஜய்வசந்த எம்.பி. நேரில் பார்வையிட்டு […]