• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

அதிக பற்று உள்ள இயக்கம் பாஜக., நயினார் நாகேந்திரன் பேசியது..,

ByPrabhu Sekar

Apr 13, 2025

புதிதாக தலைவராக பதவியேற்று உள்ளேன். ஆனால் பாஜக தொண்டர்களுடன் கடந்த 9 ஆண்டுகளாக பயணித்து வருகிறேன் அவர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றும் எண்ணம் கொண்டவர்கள்.

தேசம் தாய்நாடு தாய்மொழி அதன் மீது அதிக பற்று உள்ள இயக்கம் பாரதிய ஜனதா கட்சி அதன் அடிப்படையில் சிறப்பான முறையில் செயல்படுவோம், அதிமுக பாஜக கூட்டணி அமைந்தது மூலம் திமுகவிற்கு வெற்றி உறுதியாகி உள்ளது என திமுகவைச் சார்ந்தவர்கள் கூறுவது குறித்து கேட்டபோது,

வெற்றி உறுதியாகி இருக்கிறது என்பதை திமுக இறுதியாக கூற முடியாது அதற்கு எஜமானர்கள் ஆகிய பொதுமக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும், பாஜகவுடன் சேர்ந்து திமுக வெற்றி பெற்றது 1999இல் அதையெல்லாம் மறந்துவிட முடியாது

டிடிவி ஓபிஎஸ் போன்றவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா என்பது குறித்து கேட்ட பொழுது,

அதை அப்படி கூற முடியாது, நிகழ்ச்சிகளை பொறுத்து கலந்து கொள்வார்கள்,

அம்பேத்கர் சிலைக்கு அனைத்து பகுதியில் உள்ள பாஜகவினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நரேந்திர மோடி சார்பாகவும் பொதுமக்கள் அனைவருக்கும் வரும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,

திமுகவுடன் மறைமுக கூட்டணியும் அதிமுகவுடன் நேரடி கூட்டணியில் பாஜக உள்ளது என விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளது குறித்து கேட்டபோது,

திமுகவுடன் எப்படி நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம் என்று கூற முடியும் எந்த வகையிலும் நாங்கள் மறைமுக கூட்டணி வைக்கவில்லை அண்ணா திமுகவுடன் கூட்டணி சட்டமன்றத்தில் வைத்துள்ளோம் என்றால் அது நியாயமான கருத்துக்களை மறைமுக கூட்டணி எப்படி வைத்துள்ளார் என அவர் கூறுகிறார் என்று தெரியவில்லை. ஒரு கட்சியில் தலைவர் பொறுப்பில் இருப்பவர்கள் சரியாக கூற வேண்டும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது,

விஜயுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து கேட்டபோது,

அது தலைமை தான் முடிவு எடுக்கும் என தெரிவித்தார்,

இரண்டு விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும் வெளியில் பேசுவது வேறு சட்டமன்றத்தில் பேசுவது வேறு பொது கூட்டம் மேடையில் விமர்சனம் செய்வார்கள் சட்டமன்றத்தில் யாரும் யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது ஒருமித்த கருத்தோடு தான் இருப்பார்கள் ஆளும் கட்சி எதிர்கால கருத்துக்களை கூறும் பொழுது மக்களுக்கு எதிரான கருத்துகளையோ அல்லது கொள்கைகளையோ கூறும் பொழுது அதற்கு மாற்றுக்கருத்து அல்லது விமர்சனம் மேற்கொள்ளப்படும்.

சட்டமன்றத்தில் அதிமுக அனைவரும் ஒன்றாக தான் பேசிக் கொண்டிருப்பார்கள் அண்ணா திமுகவில் என அனைவரும் வேண்டியவர்கள் திமுகவில் அனைவரும் எனக்கு நன்றாக தெரியும். ஆனால் அவர்களுடைய கொள்கை வேறு எங்கள் கொள்கை வேறு.. எனக்கூறி தூத்துக்குடி செல்வதற்காக புறப்பட்டு சென்றார்.