• Fri. Apr 26th, 2024

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டவர்கள் சென்ற Mi-17v5 ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்துள்ளது . இதற்கு முன் எம்.ஐ.17வி-5 ரக ஹெலிகாப்டர்கள் விபத்துக்கு உள்ளான நிகழ்வுகள் என்னென்ன?

எம் ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டர்கள் உலகம் முழுக்க பல நாட்டு ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உலகின் நவீன ராணுவ போக்குவரத்து ஹெலிகாப்டர்களில் ஒன்றாக கருதப்படுகிறது என்றாலும், எம் ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டர் கடந்த காலங்களில் பல்வேறு விபத்துகளில் சிக்கி ராணுவ அதிகாரிகள், பொதுமக்கள், காவல்துறை என பல தரப்பினர் பலியாகி உள்ளனர்.

2017, ஆகஸ்ட் 23 உத்தராகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத்தில் ஒரு ஹெலிபேட் தளத்திலிருந்து புறப்பட்ட இந்திய விமானப்படையின் எம் ஐ-17 வி5 ஹெலிகாப்டர் அடுத்த சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது. ஏ என் ஐ தகவல்கள் படி ஹெலிகாப்டரில் பயணித்த யாரும் உயிரிழக்கவில்லை.

2017, அக்டோபர் 6 அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின், சீனாவுக்கு அருகில் உள்ள தவாங் பகுதியில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த எம் ஐ-17 வி5 ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானப் படையைச் சேர்ந்த ஐந்து பேரும், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த இருவரும் உயிரிழந்தனர்.

2019, பிப்ரவரி 27 காஷ்மீரில் ஸ்ரீநகர் விமானப்படைத் தளத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்ட எம் ஐ 17 வி5 ரக ஹெலிகாப்டர், அடுத்த சில நிமிடங்களில் தரையில் விழுந்து நொறுங்கியது. வழக்கமான ரோந்துப் பணிக்குப் புறப்பட்ட விமானத்தில் இருந்த ஆறு விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஒரு சிவிலியன் இந்த விபத்தில் பலியாயினர்.

2019, பிப்ரவரி 27 காஷ்மீரில் ஸ்ரீநகர் விமானப்படைத் தளத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்ட எம் ஐ 17 வி5 ரக ஹெலிகாப்டர், அடுத்த சில நிமிடங்களில் தரையில் விழுந்து நொறுங்கியது. வழக்கமான ரோந்துப் பணிக்குப் புறப்பட்ட விமானத்தில் இருந்த ஆறு விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஒரு சிவிலியன் இந்த விபத்தில் பலியாயினர்.

நீலகிரியில் பிபின் ராவத் பயணித்த இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து – 5 பேர் பலி
இந்தியாவின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத் – யார் இவர்?
2013 ஜூன் 25 உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் காலத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த எம் ஐ 17 வி5 ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் எம் ஐ 17 வி 5 ரக ஹெலிகாப்டர் விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

2014 ஜூலை 11 மாசிடோனியா காவல்துறை எம் ஐ 17 வி5 ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வந்தது. ஸ்ட்ரோமிகா நகரத்தில் இரவுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் நான்கு விமானிகள் பலியாயினர்.

வி 5 ரக ஹெலிகாப்டர்கள் மட்டுமே இத்தனை விபத்துகளை எதிர்கொண்டுள்ளது, உலகம் முழுக்க பல்வேறு எம் ஐ 17 ரக ஹெலிகாப்டர்கள் பல்வேறு விபத்துகள் பதிவாகியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *