• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம்.. இன்று தீர்ப்பு வெளியாகிறது…

Byகாயத்ரி

Jul 20, 2022

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நடைபெற்ற போது அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் கைப்பற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து காவல்துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதனை அடுத்து அதிமுக அலுவலகத்தில் வைத்த சீலை அகற்ற வேண்டும் என பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில நாட்களாக விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்பார்த்து அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.