

முதன்முறையாக பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நோயாளி இரண்டு மாதம் ஆன நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்ததாக மேரிலாந்து மருத்துவமனை தெரிவித்துள்ளது.
57 வயதான டேவிட் பென்னட், மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் செவ்வாய்க்கிழமை காலமானார். அவர் மரணத்திற்கு சரியான காரணத்தை மருத்துவர்கள் சொல்லவில்லை. ஆனால், சில நாள்களாகவே அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாக தெரிவித்தனர்.
மனித மருத்துவத்தில் பன்றிகள் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பன்றி தோல் ஒட்டுதல், பன்றி இதய வால்வுகளை பொருத்துதல் போன்ற பணிகள் நடைபெறுகின்றன. ஆனால் அதிக பதப்படுத்தப்பட்ட திசுக்களைப் பயன்படுத்துவதை விட முழு உறுப்புகளையும் மாற்றுவது மிகவும் சிக்கலானது.
இந்த சோதனைகளில் பயன்படுத்தப்பட்ட மரபணு திருத்தப்பட்ட பன்றிகள், யுனைடெட் தெரபியூட்டிக்ஸின் துணை நிறுவனமான ரெவிவிகோரால் வழங்கப்பட்டது .குறிப்பிடத்தக்கது.

