மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சமீபத்தில் ஹிந்தி மொழியை ஆங்கில மொழிக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டுமெனவும், இந்தி தான் இந்தியாவின் இணைப்பு மொழி எனவும் தெரிவித்திருந்தார். இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது!
இந்நிலையில், இதற்கு பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற தேசிய கூட்டமைப்பின் தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு கருத்தரங்கில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவரிடம் அமித்ஷாவின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தமிழே இந்தியாவின் இணைப்பு மொழி என ஒற்றை வார்த்தையில் கூலாக பதில் அளித்துள்ளார்.