• Tue. Apr 30th, 2024

இடிந்து விழும் நிலையில் சாய்ந்த கோபுரம்..!

Byவிஷா

Dec 4, 2023

இத்தாலி போலோக்னா நகரின் அடையாளமாக உள்ள கரிசெண்டா சாய்ந்த கோபுரம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இத்தாலி நாட்டின் போலோக்னா நகரின் முக்கிய அடையாளமாக உள்ள கரிசெண்டா சாய்ந்த கோபுரம் 900 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது ஆகும்.
இங்கு, பல ஆண்டுகளாக பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா சென்று சாய்ந்த கோபுரத்தை கண்டுகளித்து வருகின்றனர். இந்த கோபுரம் நிமிர்ந்து நின்றிருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சாயத் தொடங்கியது. இது முற்றிலும் சாயாமல் இருக்கும் வகையில், பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தனர். இதை அறிவியல் ஆய்வுக்குழுவினர் பார்த்து, ஆய்வு செய்து, கடந்த 2019 ஆம் ஆண்டு 27 பக்க அறிக்கை வெளியிட்டனர்.
அதில், இக்கோபுரம் இடிந்து விழ வாய்ப்புள்ளதகவும் இது மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். இந்த நிலையில், கரிசண்டா கோபுரம் 4 டிகிரி சாய்ந்துள்ளது. ஆனால் இத்தாலியின் பைசா நகரின் சாய்ந்த கோபுரம் 5 டிகிரி சாய்ந்துள்ள போதிலும், கரிசண்டா கோபுர உறுதித்தன்மை மோசமடைந்துள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கரிசெண்டா கோபுரம் 157 அடி உயரம் கொண்ட நிலையில், 1109-1119 காலக்கட்டத்தில் இக்கோபுரம் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *