நஷ்டம் காரணமாக சென்னையில் உள்ள ஃபோர்டு கார் தொழிற்சாலை மூடப்பட உள்ள நிலையில் அந்த தொழிற்சாலையை மீண்டும் இயக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் எதுவும் பலனளிக்கவில்லை. இதனால் தொழிற்சாலை மூடப்படுவதால் நேரடியாக 4,100 தொழிலாளர்கள் மற்றும் மறைமுகமாக 25,000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்நிலையில் மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலை தனது கடைசி காரான ECO ஸ்போர்ட்ஸ் காரை தயாரித்து முடித்துள்ளது. இந்த கடைசி காரை ஊழியர்கள் அலங்கரித்து கண்ணீர் மல்க தொழிற்சாலைக்கு விடை கொடுத்தனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை மறைமலைநகரில் செயல்பட்டு வந்த இந்த ஃபோர்டு தொழிற்சாலை ஜூலை 31 ஆம் தேதியுடம் மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.