• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

இன்டிகோ விமானம் மதுரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ByKalamegam Viswanathan

Nov 21, 2024

சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய இன்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக மதுரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு உட்பட 77 பயணிகள் பத்திரமாக இங்கிருந்து கார் மூலம் புறப்பட்டனர்.

இண்டிகோ விமானம் சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு 7:35 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். இந்த நிலையில் வழக்கம் போல் இன்று காலை 6:26 மணியளவில் 77 பயணிகளுடன் சென்னையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் தூத்துக்குடி விமான நிலையம் அருகே மோசமான வானிலை மற்றும் அதிக மேகமூட்டம் காரணமாக மதுரை விமான நிலையத்தில் காலை 9.25 மணியளவில் தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பயணம் செய்த நிலையில் அவர் உட்பட 77 பயணிகளும் பத்திரமாக மதுரை விமான நிலையத்திலிருந்து கார் மூலம் புறப்பட்டனர்.

அமைச்சர் உட்பட 77 பயணிகளுடன் தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானம் மோசமான வானிலை காரணமாக திடீரென மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.