பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம், தனது தோட்டத்திற்குள் புகுந்த பாம்பினை மிகுந்த லாவகத்துடன், எந்தவித அச்சமுமின்றி சர்வ சாதாரணமாக பிடித்து பத்திரமாக மீட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

திடீரென தோட்டத்திற்குள் வந்த பாம்பினை கவனித்த அவர், உடனடியாக அதை பாதுகாப்பாக பிடித்து, மனிதர்களுக்கும் பாம்பிற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வனப்பகுதிக்குள் விட்டுள்ளார். இந்த மீட்பு நடவடிக்கையின் போது அவர் காட்டிய துணிச்சலும் பொறுப்புணர்வும் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோவை ஏ.பி. முருகானந்தம் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அது தற்சமயம் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது. பலரும் அவரது துணிச்சலை பாராட்டியும், வனவிலங்குகளை பாதுகாப்புடன் கையாள வேண்டிய அவசியத்தை இந்த செயல் உணர்த்துவதாகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.




