தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆள் இல்லா கடை திறப்பு விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். 157வது ஆண்டாக பழைய பேருந்து நிலையத்தில் இந்தக் கடை செயல்பட்டது.

பிஸ்கட், பேஸ்ட், கடலை மிட்டாய், பென்சில், பேனா, ஸ்கேல், டஸ்ட் பின், கப், மகாத்மா காந்தியின் சத்திய சோதனை புத்தகம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட விலையுடன் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தது. மக்கள் தங்களுக்குத் தேவையானப் பொருட்களை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை கல்லாபெட்டியில் போட்டனர். ரூ.10ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கடையில் வைக்கப்பட்டு இருந்தது.

காந்தி ஜெயந்தி அன்று ஒரு நாளாவது மக்கள் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இதை ஒவ்வொரு நாளும் கடைபிடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த ஏற்பாடு நடந்து