• Wed. Dec 11th, 2024

அப்பா தயாரிப்பில் மகன் நடிக்கும் வரலாறு முக்கியம்

தமிழ் சினிமாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இயக்குநர்களை தனது தயாரிப்பின் மூலம் அறிமுகப்படுத்தியவர் இந்தளவிற்கு இயக்குநர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் புதிதிதாக வாய்ப்பு கொடுத்த தயாரிப்ப நிறுவனம் தமிழ் சினிமாவில் இல்லை இன்றுவரை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரிப்பு, விநியோகம் என உயிர்ப்புடன் இருப்பது சூப்பர்குட் நிறுவனம் மட்டுமேசூப்பர் குட் ஆர்.பி.சவுத்ரியின் மகனான ஜீவா அப்பா தயாரிப்பில் 2003ல்ஆசை ஆசையாய் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன்பிறகு அப்பா தயாரிப்பிலேயே தித்திக்குதே படத்தில் நடித்தார். தொடர்ந்து சில படங்களை மகனுக்காக தயாரித்தார் ஆர்.பி.சவுத்ரி. கடைசியாக ஜீவா நடித்த களத்தில் சந்திப்போம் படத்தை தயாரித்தார். ஜீவா தற்போது கோல்மால், மேதாவி படங்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் மீண்டும் அப்பாவின் சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வரலாறு முக்கியம் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்குகிறார். சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்த காஷ்மீரா நாயகியாக நடிக்கிறார்.


இவர்கள் தவிர பிரக்யா நாகரா, விடிவிகணேஷ், கே.எஸ்.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை உள்பட பலர் நடிக்கிறார்கள். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார்.


சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.