• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அராபிக் குத்துக்கு குத்தாட்டம் போட்ட நாயகி!

பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்டுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவவிற்கு அறிமுகமாகியவர் தான் பூஜா ஹெக்டே. அதனை தொடர்ந்து தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு இவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களுக்கு நல்ல வெற்றியை பெறவே அடுத்தடுத்து பெரிய ஹீரோ படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில், தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடிக்க கம்பேக் கொடுத்துள்ளார்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், நேற்று இப்படத்தின் “அரபி குத்து” பாடல் வெளியானது. இந்த பாடல் தற்போது 23 மில்லியன் பார்வையாளர்களையும் 2 .1 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது.

அந்த வகையில், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே அரபி குத்து பாடலான “HalamithiHabibo” பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்டுள்ளார்.