• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வெயில் தாக்கம் இனி படிப்படியாக குறையும்

ByA.Tamilselvan

May 25, 2023

நாட்டில் வெப்ப அலை ஓய்ந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் வெப்பத்தின் அளவு இனி படிப்படியாக குறையத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் திடீரென்று ஆலங்கட்டி மழை பொழிந்தது.
தொடர் கனமழையால் ஜம்முவின் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனிடையே மலை பிரதசேங்களிலும் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதே போல இந்தியாவின் தென் மாநிலங்களிலும் வெப்பம் படிப்படியாக குறையதுவங்கும் எனவும் கேரளாவில் அடுத்த சில தினங்களில் தென்மேற்கு பருவமழை துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது