• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பட்டியலின மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக தலைமை ஆசிரியை மீது குற்றச்சாட்டு

Byவிஷா

Apr 29, 2024

திருப்பூர் மாவட்டம், குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள கழிவறையை தலைமைஆசிரியை ஈஸ்வரி, பட்டியலின மாணவிகளை சுத்தம் செய்ய வைத்ததாகவும், அதற்கு அறிவியல் ஆசிரியை உடந்தையாக இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவு, வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தாராபுரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.