
மனிதநேயமற்ற கொடூர தீவிரவாதிகளை அழித்தொழிக்கும்சிந்தூர் நடவடிக்கையில் வெற்றியை ஈட்டி தந்த முப்படைகளுக்கும் , நமது படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வழிநடத்திய பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், பாரதிய ஜனதா கட்சி விருதுநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பாக மூவர்ணக் கொடி யாத்திரை சிவகாசி பிள்ளையார் கோவிலில்* இருந்து சிவகாசி பேருந்து நிலையம்வரை மாபெரும் மூவர்ண கொடி யாத்திரை விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சரவண துரை ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வை ஆர்.எஸ்.எஸ் மூத்த நிர்வாகி சிவலிங்கம் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் பார்த்தசாரதி சோலையப்பன், ராதாகிருஷ்ணன், சுரேஷ் உள்ளிட்ட பாஜக விருதுநகர் மேற்கு மாவட்டத்தைச் சார்ந்த மாநில, மாவட்ட, அணி, பிரிவு நிர்வாகிகளும், மண்டல் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் என அனைத்து மற்றும் பொதுமக்களும் பெருந்திரளாக* கலந்து கொண்டனர். வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய அமைபாளர் மாரிச்செல்வம் நன்றி கூறினார்.
