• Sat. Apr 27th, 2024

சட்டப்பேரவையில் ‘வணக்கம்’ எனக்கூறி, உரையை தொடங்கிய ஆளுநர்!

2022-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம், சென்னை, கலைவாணர் அரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று தொடங்கியது!

*வணக்கம் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

*மு.க.ஸ்டாலின் இந்தியாவின் பிரபலமான முதலமைச்சர்

*’எங்கும் தமிழ் ; எதிலும் தமிழ் திட்டம்’ மூலம் தமிழை எல்லா இடங்களிலும் கொண்டு சேர்க்க நடவடிக்கை

*கொரோனா 2 வது அலையை சிறப்பாக கையாண்டதற்கு முதல்வருக்கு பாராட்டுகள்; முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது

*பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படும்

*கொரோனா நோயாளிகள் 33,117 நபர்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர்

*தமிழக அரசின் ’மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்திற்கு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

*வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களையும் மறுசீரமைக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்

*இல்லம் தேடி கல்வித் திட்டம்’ மூலம் தரமான கல்வியை எல்லா குழந்தைகளுக்கும் தர தமிழக அரசு முனைந்திருக்கிறது

*இரு மொழி கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது

*ஒமிக்ரான் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது

*இலங்கை தமிழர் நலனுக்காக இலங்கை தமிழரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன

*சென்னை உள்ளிட்ட நகரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்தது; நீர்த்தேக்கங்களில் இருந்து முன்கூட்டியே நீர் திறந்துவிடப்பட்டு பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது

*அடுத்த 10 ஆண்டுகளில் குடிசை இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்

*500 கோடி ரூபாயில் சிங்கார சென்னை திட்டம் செயல்படுத்தப்படும்

*தந்தை பெரியார், கலைஞர் கருணாநிதியின் கனவை நனவாக்கும் விதமாக அனைத்து சாதியினரையும் தமிழ்நாடு அரசு அர்ச்சகர்கள் ஆக்கியுள்ளது

*கல்வி நிறுவனங்களின் அருகில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும்

*25,345 அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும்

*ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோயில் நிலங்களை தமிழக அரசு மீட்டதற்கு பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

*நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையற்றது என தொடர்ந்து அரசு வலியுறுத்தும்

மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவை மிகப்பெரிய பாரம்பரியங்களை கொண்டது என்று ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *