• Fri. Apr 18th, 2025

ஊட்டியில் அமர்ந்து கொண்டு ஊர் நியாயம் பேசும் ஆளுநர்

ஊட்டியில் நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர். என் ரவி நேற்று பேசியது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. ஊட்டியில் ஆளுநர் ரவி தலைமையில் துணை வேந்தர்கள் ஆலோசனை கூட்டம் கடந்த 2 நாட்களாக நடந்தது. மத்திய, மாநில, தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.இணை வேந்தரான உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை அழைக்காமல் இந்த கூட்டத்தை நடத்துவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மாநாட்டில் முதல் நாள் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, நாட்டை துண்டாட நினைப்பவர்கள்,. இந்த நாட்டில் அமைதியே முக்கியம். இந்த நாடு ஒரே குடும்பம். இதில் வேறுபாடுகள் இருக்க கூடாது. காஷ்மீரில் பிரிவினை சக்திகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர்., வடகிழக்கு மாநிலங்களில் இருந்த பிரச்சனையும் தீர்க்கப்பட்டுள்ளது

நாட்டின் ஒருமைப்பாட்டை குலைக்கும் முயற்சி மேற்கொள்பவர்களுக்கு கருணையே காட்ட கூடாது. அவர்களுக்கு கொஞ்சம் கூட கருணையே இல்லை என்று கடுமையாக பேசினார். இந்த நிலையில்தான் நேற்று கடைசி நாள் உரையாற்றிய ஆளுநர் ரவி.. இரண்டு நாள் மாநாட்டில் பல முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. நுண்ணறிவு மற்றும் ஆழமான அமர்வு சிறப்பாக அமைந்தன. கலந்து கொண்ட அனைவர்க்கும் பாராட்டுக்கள் என்று கூறினார்.

இவர்களுக்கான சான்றிதழ்களையும் ஆளுநர் ரவி வழங்கினார். இதையடுத்து பேசிய அவர், இரண்டு நாட்களாக நடந்த மாநாடு முடிவுகள் பற்றிய ரிப்போர்ட் மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பப்படும். அதேபோல் கொள்கை வகுப்பாளர்களுடன் இந்த அறிக்கை பகிர்ந்து கொள்ளப்படும். இந்த கூட்டம் சிறப்பாக அமைந்தது. மத்திய, மாநில, தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

தங்களின் கருத்துக்களை இங்கு தெரிவித்தனர். எதிர்காலத்தை கருத்தில் கொண்ட ஒன்றிணைந்த நடவடிக்கைகளை உருவாக்க வேண்டும். எதிர்கால திட்டங்களை அடிப்படையாக வைத்து நாம் செயல்பட வேண்டும். சுதந்திரத்தின் 100 ஆண்டுகளை கொண்டாடும் போது நாம் வல்லரசாக இருக்க வேண்டும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா உலகத் தலைவராக நாம் இருக்க வேண்டும்.இதை நோக்கி நாம் முன்னேறும் வகையில் உழைக்க வேண்டும். நமது மனிதவளம்தான் நம்முடைய பலம். அதை இந்த தேசம் எதிர்நோக்கி உள்ளது. அமைதியான, வளமான இந்தியாவை நோக்கி நாம் செல்ல வேண்டும், அதுதான் ஒவ்வொரு குடிமகனின் கூட்டு பொறுப்பாக இருக்கும், என்று ஆளுநர் ரவி தனது உரையில் குறிப்பிட்டார். 2 நாட்கள் நடைபெற்ற கூட்டம் நேற்று நிறைவடைந்தது.