மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி யில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்லும்(TN58N2557) என்கின்ற அரசு பேருந்து கிளை ஆனது திருப்பரங்குன்றம் என போட்டு இருந்தது ஆனால் ஓட்டுனர்கள் சொன்னதோ கல்லுப்பட்டி கிளை என
இந்த நிலையில் கல்லுப்பட்டியில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மதுரை மூலக்கரை அருகே வரும்பொழுது சைலன்சர் திடீரென கலன்று விழுந்து சாலையில் தொங்கிக் கொண்டே ஓடி வந்தது.

ஒரே ஒரு நட்டில் மட்டும் அது தாங்கி நின்றதால் பின்னால் வந்த வாகனங்கள் மீது சைலன்சரானது கீழே விழுகாமல் பிடித்துக் கொண்டு சென்றதால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் கடலூர் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அரசு விரைவு பேருந்து முன் பக்க டயர் வெடித்து எதிர்ப்புறம் சென்று இரண்டு கார்களில் மோதி சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சைலன்சர் சாலையில் கழண்டு தொங்கி தொங்கிக்கொண்டு பல அடி தூரம் இழுத்து வந்தது அரசு பேருந்தில் பயணிக்கும் பயணிகள் மட்டுமல்லாது பின்னால் வரும் வாகன ஓட்டிகளும் அச்சத்திலையே அரசு பின் பேருந்து பின்னால் வருவதற்கு அஞ்சுகிறார்கள்.

மேலும் எதிரேவரும் வாகன ஓட்டிகளும் தற்பொழுது அரசு பேருந்து கண்டாலே எமதர்மன் வருவதைப் போல எண்ணி இருப்பதாக கருத்துக்களை தெரிவித்தனர் முறையாக பராமரிப்பு இன்றி பல அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் இனிவரும் காலங்களாவது வாகனம் எடுக்கும் பொழுது அனைத்து சோதனையும் முடித்த பிறகு பணிமனையில் இருந்து பேருந்து எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் வேறு உயிர்கள் போவதற்கு முன் நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசாங்கம் மற்றும் அரசு போக்குவரத்து கழக நிர்வாகம்




