தக்காளியை பவுடர் ஆக்கி விற்பனை செய்யும் கிடங்குகளை அரசு அமைக்க வேண்டும்.
அப்போதுதான் தக்காளி விலையேற்றத்தின் போது பொது மக்களுக்கு கை கொடுக்கும் விக்கிரம ராஜா கோயம்பேட்டில் பேட்டி,
கோயம்பேடு உணவு தாணிய மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் மசாலா, அப்பளம் விற்பனை கடை ஒன்றை ரிப்பன் வெட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
தக்காளி விலை ஏற்றம் என்பது நிரந்தரமானது அல்ல தற்போது மளிகை பொருட்கள் விலை ஏற்றம் உள்ளது. அதனை குறைக்க வழிவகை செய்ய வேண்டும்.
தக்காளியை கொள்முதல் செய்யும் இடங்களில் தக்காளியை பவுடராக்கும் கிடங்கு அமைக்க வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டால் விலையேற்ற நேரத்தில் தக்காளிக்கு பதிலாக தக்காளி பவுடர் பயன்படுத்த ஏதுவாக இருக்கும். அரசு இதனை முன் நின்று எடுத்துச் செய்ய வேண்டும்
வியாபாரிகள் பதுக்கி வைப்பதாக சொல்கிறார்கள், அது நோக்கம் அல்ல
விஜய் அரசியலுக்கு வருகிறேன் என வாய் திறந்து சொல்லவில்லை. நாம் ஏன் அதை சொல்ல வேண்டும்
விஜய் அரசியலுக்கு வந்தால், ஆலோசனை செய்து முடிவு தெரிவிப்போம்.
மாநில அரசு வியாபாரம் செய்யக்கூடாது. வியாபாரிகள் தான் வியாபாரம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.