• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பழைய குற்றாலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க அரசு பரிசீலனை

Byவிஷா

Jul 1, 2024

குற்றால அருவிகளில் ஒன்றான பழைய குற்றாலம் அருவியை வனத்துறையிடம் ஒப்படைப்பதற்காக அரசு தீவிர பரிசீலனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மே மாதம் குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சிக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்ததை அடுத்து, பழைய குற்றால அருவியை வனத்துறையிடம் ஒப்படைக்க பரிசீலனை தீவிரமாக நடைபெற்றுக் கொள்வதாக கூறப்படுகிறது.
பழைய குற்றாலம் பகுதியில் உள்ள காப்பு காட்டில் நெகிழியை முற்றிலும் ஒழிக்கும் வகையில் வனத்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வனத்துறை சார்பில் சோதனை சாவடி அமைக்க மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அனுமதி வழங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
மேலும் பழைய குற்றால அருவி வனத்துறை வசம் சென்றால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என பகுதி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து பழைய குற்றாலம் பகுதியை வனத்துறை இடம் தமிழக அரசு ஒப்படைக்குமா அல்லது தற்போதுள்ள நிலைமையே தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.