• Mon. Nov 3rd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

ஜப்பான் முன்னாள் பிரதமர் கவலைக்கிடம்!

ByA.Tamilselvan

Jul 8, 2022

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே மர்ம நபரால் சுடப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது மர்மநபர் ஷின்ஸோ அபேவை துப்பாக்கியால் சுட்டதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.

பின்புறம் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கிப்பிடித்தனர்
ஜப்பான்: திறந்த வெளியில் பரப்புரை மேற்கொண்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு!

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஷின்ஸோ அபேவை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர். ஷின்ஸோ அபே, சுயநினைவின்றி இருப்பதாகவும், மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் ஜப்பான் ஊடகம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 8.29 மணியளவில் நடந்துள்ளது. அந்த நேரத்தில் துப்பாக்கிச் சூடு போன்ற சத்தம் கேட்டது என்றும், சந்தேகத்தின் பேரில் ஒரு ஆண் நபர் ஒருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.