• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பொதும்பில் 100 கே.வி மின்மாற்றி துவக்கி வைத்த கருப்பையா எம்.எல்.ஏ.,

மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டம்பொதும்பு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட அதலை கிராமத்தில் சுமார் 350 க்கு மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளது. மேலும் விரிவாக்கத்தால் புதிய மின் இணைப்புகளும் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இங்கு கடந்த பல ஆண்டுகளாகமின் பற்றாக்குறை ஏற்பட்டு அடிக்கடிமின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் அவதிக்க ஆளாகினர். இது குறித்துசோழவந்தான் சட்டமன்ற உறுப்பினருக்குபுதிய மின்மாற்றி அமைக்க கோரி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து போர்க்கால அடிப்படையில் மின்மாற்றி அமைக்க உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று அதலை கிராமத்தில் 100 கே.வி. புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றி பணியினை கருப்பையா எம். எல். ஏ., தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதில் கோட்டமின் செயற்பொறியாளர் சிவலிங்கம், உதவி செயற்பொறி யாளர் அசோக்குமார், உதவி மின் பொறியாளர் ஆனந்த், மின்பாதை ஆய்வாளர், முகவர்கள், கம்பியார்ளர் கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.