• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

Byகாயத்ரி

Dec 9, 2021

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டாலும், புதிதாக பெயர் சேர்க்கவோ அல்லது திருத்தம் மேற்கொள்ளவோ கால அவகாசம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 17 மாநகராட்சிகள், மொத்தமுள்ள 150 நகராட்சிகளில் 110 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளன.புதிதாக தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகள், மாநகராட்சிகளில் வார்டுகளின் எண்ணிக்கையை நிர்ணயித்து அவற்றின் எல்லைகளை வரையறை செய்வது தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகின்றன.