• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ரஜினி என பெயர் வைத்தால் மட்டும் படம் ஜெயித்துவிடாது – கே.ராஜன்

பெயரால் எந்த படமும் ஜெயிக்காது நல்ல கதை இருக்க வேண்டும் என்று ரஜினி இசை வெளியீட்டு விழாவில் K.ராஜன் பேச்சு..

வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில் இயக்குநர் A.வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடித்துள்ள திரைப்படம் “ரஜினி”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை சென்னையில் நடைபெற்றது

தயாரிப்பாளர் K.ராஜன் பேசியதாவது…
சினிமாவில் மாவீரன், மகா தைரியசாலி தயாரிப்பாளர் பழனிவேல் தான். கொரோனா கடின காலத்திலும் இரண்டு படங்கள் எடுக்கிறார். இயக்குநர் A.வெங்கடேஷ் கமர்ஷியல் இயக்குநர், மக்கள் விரும்பி பார்க்ககூடிய படங்களை கமர்ஷியலாக தரக்கூடியவர் இருவரும் இணைந்து ஒரு நல்ல படம் தருகிறார்கள். ரஜினி என பெயர் வைத்ததால் இந்தப்படம் ஜெயிக்கும் என்கிறார்கள்

கதை இல்லாவிட்டால்
எந்த படமும் ஜெயிக்காது. A.வெங்கடேஷ் கண்டிப்பாக கதை வைத்திருப்பார். நாயகனுக்கு உண்டான எல்லா அம்சமும் விஜய் சத்யாவிடம் இருக்கிறது. அந்த தம்பியை பார்க்கும் போதே ஒழுக்கம் நிறைந்தவர் என தெரிகிறது. தயாரிப்பாளரை மறக்காமல் இருந்தால் தான் நீங்கள் வளர்வீர்கள், எல்லோரும் நல்லா வர வேண்டும் அதே நேரம் தயாரிப்பாளரை காப்பாற்றுங்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள். காணாமல் போன ஷெரீன் சேலை கட்டி வந்திருக்கிறார். சேலை கட்டிய தமிழ் பெண்ணாக மாறுங்கள் தமிழ் சினிமா உங்களை வாழவைக்கும். இப்போது கதை இல்லாமல் சமீபத்தில் வந்த பிரமாண்ட படமெல்லாம் தோல்வியை தழுவுகிறது. ஆனால், A.வெங்கடேஷ் கதை இல்லாமல் படமெடுக்க மாட்டார். இந்தப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் என்றார்