

நடிகர் அஜித், ஹுமா குரேஷி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. எச்.வினோத் இயக்கியுள்ளார். அஜித்தின் அடுத்த படத்தையும் அவரே இயக்கவுள்ளார் என்பது முந்தைய தகவல். இந்நிலையில் அஜித் படத்திற்கு பிறகு யாரை இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் 61வது படமான இந்தப் படத்தின் பூஜை வரும் மார்ச் மாதத்தில் போடப்படவுள்ளதாகவும் விரைவில் சூட்டிங்கை முடித்து தீபாவளி ரிலீசாக படம் வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் அஜித்தின் லுக் குறித்து தயாரிப்பாளர் போனிகபூர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் வாலி, மங்காத்தா படங்களை தொடர்ந்து நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சில தினங்களில் இந்தப் படத்தின் பூஜை போடப்படவுள்ளது.
இந்தப் படத்தையடுத்து எச் வினோத் அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுதிபதிக்கு எந்த மாதிரியான கதையை வினோத் தேர்ந்தெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
