• Mon. Apr 21st, 2025

அருள்மிகு வீரமா காளியம்மன் பங்குனி தீமிதி திருவிழா

ByR. Vijay

Apr 7, 2025

நாகை அருகே மேலவாழக்கரை அருள்மிகு வீரமா காளியம்மன் பங்குனி தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த மேலவாழக்கரையில் பழமைவாய்ந்த அருள்மிகு வீரமா காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் பங்குனி திருவிழா கடந்த மாதம் 28 ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைப்பெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைப்பெற்றது.

அப்போது ஆலயத்தில் இருந்து எழுந்தருளிய அம்மன் பூக்குழிக்கு எதிரே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து சக்தி கரகம் பூக்குழி இறங்க காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.