காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறை நடத்திய உலக அளவிலான தடகள போட்டியானது கடந்த 27.06.2025 முதல் 06.07.2025தேதி வரை அமெரிக்காவில் அலபாமாவின் பர்மிங்காமில் வைத்து நடைபெற்றது.

இந்தியாவின் சார்பில் இப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் திருமதி.கிருஷ்ண ரேகா அவர்கள் உயரம் தாண்டுதல் (High Jump) மற்றும் மும்முறை தாண்டுதல் (Triple Jump) மற்றும் 100மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

மேற்படி தலைமை காவலர் திருமதி. கிருஷ்ணரேகா அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.இரா.ஸ்டாலின் இ.கா.பஅவர்கள் நேற்று 18-07-25 மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நேரில் பாராட்டி வாழ்த்தினார். பெண் தெய்வத்தின் பெயரில் உள்ள மாவட்டத்தில் ஒரு பெண் காவல்துறை தலைமை காவலர் பாராட்டப்பட்டது. ஒரு இயற்கையான பாராட்டு என குமரியை சேர்ந்த பெண் காவலர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.