பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் புதுச்சேரி அடுத்துள்ள பட்டானூர் தனியார் திருமணத்தில் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாமக நிர்வாகிகள் தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்குழுவில் தமிழக அரசு வலியுறுத்தி 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 36 தீர்மானங்களையும் பாமக முக்கிய நிர்வாகிகள் 36 பேர் வாசித்தனர்.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கௌரவ தலைவர் ஜிகே மணியை விமர்சித்து அவதூறு பரப்பு அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்த வழக்கறிஞர் பாலு ராமதாஸ் குறித்து விமர்சனம் செய்ததற்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கட்சி சட்ட திட்டங்களுக்கு விரோதமாக நடந்து கொண்டதாக அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு 16 குற்றச்சாட்டுகளை கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளது.
அன்புமணியின் தவறுகள் என ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கையை G.K.மணி பட்டியலிட்டார்.

அதன்படி.. புத்தாண்டு பொது குழுவில் அன்புமணி மைக்கை தூக்கி போட்டது
தொடர்ந்து கட்சிக்கு கட்டுபாடாமல் கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக ஒழுங்கு நடவடிக்கை குழு கருதுகிறது. தவறான கட்சி நடவடிக்கை.. ஒட்டு கேட்கும் கருவி வைத்தது.
பொது குழு என்ற பெயரில் கூட்டம் நடத்தி ஒரு இருக்கை போட்டு நிறுவனரை அவமானப்படுத்திய அநாகரீக செயல். மக்கள் தொலைக்காட்சியில் நிறுவனர் முகத்தை கூட காட்டுவதில்லை, மக்கள் தொலைக்காட்சியை கைப்பற்றுதல்,பசுமை தாயகம் அமைப்பை கைப்பற்றுதல், அனுமதியின்றி பொது குழு நடத்தியது.
பாமக தலைமை அலுவலகத்தை மாற்றியது. நிறுவனரால் நியமித்த. அனைத்து பதவிகளும் செல்லும். அன்புமணி நீக்கியவை செல்லாது.
என எட்டு பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸத்திற்கு பரிந்துரைத்துள்ளது.