ஏறக்குறைய 8 ஆண்டுகள் கேப்டன் பதவியில் இருந்த விராட் கோலி இந்தியாவிலேயே வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையோடு வலம் வந்தார்.
சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இச்சூழலில் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி வெளியிட்டுள்ள அறிவிப்பு அவரது ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. இந்திய டி20 மற்றும், பெங்களூர் அணியின் கேப்டன்சியில் இருந்து விலகியது, ஒருநாள் போட்டிகளின் கேப்டசியில் இருந்து பிசிசிஐ-யால் தூக்கப்பட்டது என்று பல நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது மீதமுள்ள டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து தானாகவே முன்வந்து விலகியுள்ளார் கோலி. டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி செய்த சாதனைகள் இதோ..
மகேந்திரசிங் தோனி கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகியபின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை முதல்முறையாக வழி நடத்தினார் விராட் கோலி. ஏற்குறைய 8 ஆண்டுகள் கேப்டன் பதவியில் இருந்த கோலி இந்தியாவிலேயே வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையோடு வலம் வந்தார். இதுவரை விராட் கோலி 68 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை வகித்துள்ளார். இதில் 40 வெற்றிகளையும், 17 தோல்விகளையும் சந்தித்துள்ளது இந்திய அணி;11 போட்டிகளை டிரா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டியில் கேப்டனாக விராட் கோலி 5,864 ரன்கள் குவித்துள்ளார். இதில் 7 இரட்டை சதம், 20 சதம், 18 அரைசதம், 7 ஆட்டநாயகன் விருது, 3 தொடர் நாயகன் விருதை கேப்டன் கோலி வென்றுள்ளளார். இந்திய கேப்டனாக அதிக டெஸ்ட் சதங்கள் (20) அடித்தவர் என்ற சாதனையும் கோலிக்கு சொந்தமானதே. டெஸ்ட் அணி கேப்டனாக வெற்றி சதவிகிதத்தை 58.82 ஆக வைத்துள்ளார் விராட் கோலி.
இந்திய கேப்டனாக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் (68 போட்டிகள்) மற்றும் அதிக டெஸ்ட் வெற்றிகளை தந்தவர் என பல்வேறு சாதனைகளை தன்வசப்படுத்தி இருக்கிறார் கோலி. கிரேம் ஸ்மித் (53 வெற்றி), ரிக்கி பாண்டிங் (48 வெற்றி) மற்றும் ஸ்டீவ் வாக் (41 வெற்றி) ஆகியோருக்கு அடுத்து, டெஸ்ட் வரலாற்றில் நான்காவது வெற்றிகரமான கேப்டனாக விராட் கோலி உள்ளார்.
விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த போது , இந்தியா தரவரிசையில் இருந்த இடம் 7. அவர் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள இப்போது, இந்தியா தரவரிசையில் உள்ள இடம் ஒன்று. டெஸ்ட் கேப்டனாக கோலியின் தலைமையின் கீழ் இந்திய அணி சொந்த மண்ணில் கிட்டத்தட்ட தோற்கடிக்கப்படவில்லை என்பதை மறந்துவிடக் கூடாது.
டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து விராட் கோலி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ”ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒவ்வொன்றும் நிறுத்தப்பட வேண்டும். என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக் காலத்தையும் நிறுத்துகிறேன்.
என்னுடைய கேப்டன்ஷி பயணத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் இருந்தன. ஆனால், ஒருபோதும் என்னுடைய முயற்சியிலும், நம்பிக்கையிலும் தொய்வு வந்தது இல்லை. இந்திய அணியை சரியான திசையில் கொண்டு செல்ல ஒவ்வொரு நாளும் கடினமான உழைப்புடன், இடைவிடாத முயற்சியுடன் 7 ஆண்டுகள் கடினமாக உழைத்தேன். இந்தப் பணியை நான் முழு நேர்மையுடன் செய்தேன், எதையும் விட்டுவிடவில்லை.
ஒவ்வொரு விஷயத்தை நான் செய்யும்போதும் 120 சதவீத உழைப்பை வழங்குவேன் என நான் நம்புகிறேன். ஆனால், என்னால் செய்யமுடியாவிட்டால், அதைச் செய்ய இது சரியான நேரம் இல்லை என எனக்குத் தெரியும். நான் என் மனதில் முழுத் தெளிவுடன் இருக்கிறேன். என்னுடைய அணிக்கு நேர்மையற்றவனாக இல்லை.
இந்திய அணியை இத்தனை ஆண்டு காலம் தலைமை தாங்கி வழிநடத்த வாய்ப்பு வழங்கிய இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி. தொடக்க நாளிலில் இருந்து என்னுடைய நோக்கத்தோடு பயணித்த சக வீரர்களுக்கு நன்றி, எந்த சூழலிலும் யாரையும் கைவிட்டதில்லை. ரவி சாஸ்திரி, எம்எஸ் தோனியின் பங்களிப்பை நான் மறக்க முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த எந்திரம் நகர்ந்து முன்நோக்கி செல்ல ரவி பாய் காரணமாக இருந்தார்.
என்னுடைய கேப்டன்ஷியில் நம்பிக்கை வைத்து, இந்திய அணியை முன்னோக்கி என்னால் கொண்டு செல்ல முடியும் என்று நம்பிக்கை வைத்து செயல்பட்ட தோனி சகோதரருக்கு மிகப்பெரிய நன்றி” என்று மிக உருக்கமாகத் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கோலி.
- மதுரையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மதுரை […]
- சிவகாசி சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் சிறைவிருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை […]
- வாடிப்பட்டியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலைய முன்பாக வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக உயர் நீதிமன்ற […]
- திருப்புவனம் அருள்மிகு புஷ்பனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன்கோயிலில் பங்குனி உற்சவ விழாசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழாவில் 71 வது […]
- உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுகவினர் நடனமாடி, பட்டாசு […]
- மதுரையில் பெண்குழந்தை விற்பனை -மூன்று பெண்கள் சிக்கினர்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்குழந்தை விற்கப்பட்டதாக மூன்று பெண்களை பிடித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.ஆரப்பாளயத்தில் […]
- விருதுநகர் நகர் அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபேற்றுக்கொண்டதை முன்னிட்டுவிருதுநகரில் நகர அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- சேலம் ஊமகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டுவிழாஅரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் முதல் முறையாக ஆண்டுவிழா நடைபெற்ற நிகழ்வு […]
- திருவில்லிபுத்தூரில், வனத்துறை மோப்ப நாய் உயிரிழப்பு…விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் இருந்த மோப்ப நாய், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. […]
- நத்தம் கோவில் திருவிழாவில் ஆண்கள் பங்கேற்கும் கறிவிருந்து..!நத்தம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலில் வருடந்தோறும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய கறிவிருந்து திருவிழா […]
- அதிமுக மதுரை மாநகர் சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி- மதுரை மாநகர் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- மதுரை குருவிக்காரன் சாலையில் ஒரு சம்மர் ஸ்பாட்..!தமிழகம் முழுவதும் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சதம் அடித்து வரும் நிலையில், மதுரையில் […]
- நெல்லையில் இருகைகளால் திருக்குறளை எழுதி அசத்திய மாணவி..!நெல்லையில் மாணவி ஒருவர் இருகைகளாலும் திருக்குறளை எழுதி சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் […]
- ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு..!பா.ஜ.க.வின் உட்கட்சிப் பூசலால், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலைக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியில் புயலை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜகவில் […]
- மதுரையில் சொகுசு காரை அடித்து நொறுக்கிய ஆறு பேர் கைது..!மதுரையில் உள்ள மதுபானக்கடை முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய ஆறு பேர் கைது […]