• Fri. Apr 26th, 2024

முடிவில்லாமல் நீளும் 47 ஆண்டு கால மிசா சர்ச்சை

சில மாதங்களுக்கு முன்பு உண்மையிலேயே மிசாவில் ஸ்டாலின் கைதானாரா, இல்லையா என்று சிலர் சர்ச்சை கிளப்பினர்.. இது விவாத பொருளாகவும் உருவானது.. இந்த விவகாரத்தை பாஜகவும் அதிமுக அமைச்சர்கள் சிலரும் கையில் எடுத்து, மிசா கைதுக்கான ஆதாரத்தை ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் சேர்த்து விடுத்தனர்.

இதுகுறித்து திமுக தரப்பிலும், ஸ்டாலினும் பதிலளித்தாலும் திரும்ப திரும்ப இது சோஷியல் மீடியாவை விவாத பொருளாக்கப்பட்டு ஒருவித பரபரப்பிலேயே வைத்திருந்தனர். “மு.க. ஸ்டாலின் ஒரு மிசா கைதி அல்ல, ஆதாரங்கள் எதுவும் முறையா இல்லையே.. நெஞ்சுக்கு நீதி, ஸ்டாலினின் பயணக்குறிப்புகள் நூல்களில்தான் ஆதாரம் இருக்கிறது, அதனால் ஆதாரத்தை காட்டுங்கள்” என்று ஒரு தரப்பும், சோஷியல் மீடியாவில் இதனை கிண்டலடித்து மீம்ஸ்களை பதிவிடுவது என இன்னொரு தரப்பும்.. முடிவில்லாமல் இந்த விவகாரம் இன்று வரை சென்று கொண்டு இருக்கிறது.

ஆம் மிசா சட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கைது செய்யப்பட்ட தினம் இன்று. இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் பேசப்பட்டாலும் திமுகவினரால் இதற்கு ஆதாரம் காட்ட முடியும் என்று நம்புகின்றனர். மேலும் எமர்ஜென்சி காலத்தின் இந்திரா காந்தி அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் இந்த பிரச்சனையில் ஆதரவு தெரிவிக்க வேண்டாம் , அதே போல எதிர்ப்பும் தெரிவிக்க வேண்டாம் என்று தனது தூதுவர்களை விட்டு பேசியுள்ளார். மீறி எதிர்ப்பு தெரிவித்தால் உங்கள் ஆட்சி கவிழ்க்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் கலைஞரோ நான் பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கு அஞ்சமாட்டேன், இதை உங்கள் பிரதமரிடம் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு காமராஜர் காண சென்றுள்ளார். எமர்ஜென்சியால் இந்திரா காந்தியின் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக காமராஜரும் தேசம் போச்சு இந்தியாவிலே இன்றைய தமிழ்நாட்டில் மட்டும் ஜனநாயகம் என்ற சுதந்திரத்தை சுவாசிக்க முடிகிறது. எனவே நீங்கள் எந்த காரணத்தை கொண்டும் ராஜினாமா செய்ய கூடாது கலைஞர கருணாநிதியிடம் காமராஜர் கூறினார்.

உடனே சென்னை கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக சார்பில் எமர்ஜென்சி அடக்குமுறைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. ஆட்சி கவிழ்க்கபடுகிறது.அதிகாரிகள் கலைஞர் வீட்டில் கைது நடவடிக்கைக்கு வருகின்றனர். அவர்கள் எதிர்பாத்து காத்திருப்பது கலைஞரை தான் கைது செய்ய போகிறார்கள் என்று ஆனால் கைது செய்ய திட்ட மிட்டது முக ஸ்டாலினை தான். திருமணம் முடிந்த ஐந்து மாதத்தில் முக ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டு அடைக்கபடுகிறார்.இதனை சிட்டி பாபு தனது டைரி குறிப்பில் குறிப்பிடுகிறார்.

கதவு திறந்தது. பலர் முன்னே செல்வது என்ற நிலை. காலம் கதவுகளை மூடப் போவதில்லை. அர்ச்சனைக்குக் கொண்டு வந்த அரசியல் மலர்கள் அல்லவா நாங்கள்? எனவே திரும்பிப் பார்த்தேன். தீர்மானமாக நானே கொட்டடியிலிருந்து வெளியே வந்தேன். என்னைப் பெயர் சொல்லி அழைத்தனர். எதிர்பார்த்த ஆள் அல்லவா நான்?
எனவே, ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் கன்னத்தில் வீழ்ந்த அறைகள். அடடா…
நிலைக்கண்ணாடி கல்பட்டு உடைந்து விழுந்ததுபோல எனக்குத் தோன்றியது. கண்கள் கணநேரம் காண்பதெல்லாம் காரிருள் போல் இருந்தது.
இரு கோடுகளுக்கு இடையில் தள்ளப்பட்ட எலி, ஆம். அவர்கள் அடித்ததும் அப்படித்தான். அவர்கள் அசந்தனர். நான் எலி அல்ல புலி என்பது அவர்களுக்குப் புரிந்திருக்கும். காரணம் அத்தனை அடிக்கும் நான் கீழே விழவில்லை. அவர்கள் என்னைப் பிடித்துத் தள்ளினார்கள். மதில் சுவர் மீது சட்டெனத் திரும்பிக் கொண்டேன்.
ஒரு காவலன் வயிற்றில் எட்டி உதைத்து விட்டான். சுவரின் மீது சாய்ந்து கீழே உட்கார நினைத்தேன். ஆனால் நீண்ட நெடுமரத்தை ஒரு மதயானை இடக்காலாலும் வலக்காலாலும் துதிக்கையாலும் வெறிபிடித்து உதைப்பது போல் என்னை உதைத்தனர்.
அதே சித்ரவதைக்கு ஆளான ஆற்காடு வீராசாமி அப்படியே தரையில் நெடுமரமாகச் சாய்ந்துக் கிடந்தார். பேச்சும் மூச்சும் நின்று போனதா? ஆம். நினைவு இழந்திருந்தார்.
அருகே என் அன்புத் தம்பி, ஆமாம். ஸ்டாலின்தான். தமிழகத்து முதலமைச்சரின் மகன் என்று நேற்றுவரை அறியப்பட்டவர். சுருளிராஜன் என்ற காவலன் அவனது முகத்தில் எட்டி உதைத்தான். தம்பியின் அழகிய முகத்தை அவன் சுவைத்துப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறான். அடுத்து ஒரு கொலைகாரன் லத்திக் கம்பால் ஸ்டாலினின் தோள்பட்டையைத் தாக்கினான். காக்கி உடை அணிந்த வார்டன் ஒருவன் தம்பியின் கன்னத்தில் அறைந்தான்.
இந்த சண்டாளர்கள் தம்பியை அடித்தே கொன்று விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது. மற்றவர்களோ மண்ணுடன் சாய்ந்துக் கிடந்தார்கள். அவர்கள் தம்பிக்கு உதவுவதற்கு எழவும் முடியாது. அப்படி எழ முடிந்தாலும் அவர்களை அருகில் நிற்க எமகாதகர்கள் அனுமதிக்க மாட்டார்கள். என்ன செய்வது? எனக்கு ஒரு துணிச்சல் பிறந்தது. திடீர் என்று குறுக்கே பாய்ந்தேன். தம்பி ஸ்டாலினை அறைக்குள் தள்ளிவிட்டேன். என் கழுத்தின் மீது சராமரியாக அடிகள் விழுந்தன. தம்பி ஸ்டாலின் தான்பட்ட அடிகளை மறந்துவிட்டான். நெடுமரமாய் வீழ்ந்துவிட்ட எங்களை அவன் முழுமையாக அறைக்குள் அழைத்துச் சென்றான்.
அப்போது தம்பி எப்போதும் தோளில் ஓர் துண்டு போட்டிருக்கும். சிறைப்பாவிகள் அதனை மட்டும் விட்டு வைத்திருந்தார்கள். அந்த துண்டைத் தம்பி அறைக்குள்ளே விரித்தார். தாக்கப்பட்டவர்களைத் தாங்கிப் படுக்க வைத்தார்.
நான் சிறைக் கொட்டடிக் கதவிற்கு வெளியேதான் கிடந்தேன். ஒரு காவலன் என்னை சற்றுத் தூக்கினான். “வாடா தம்பி வா” என்று குத்துவிட்டான். கொட்டடிக்குள்ளே சுருண்டு விழுந்தேன். கொடிய காற்றில் நெடிய மரம் சாய்ந்து விழுவது போல் விழுந்தேன். இல்லை தள்ளப்பட்டேன். அப்போது எனக்கு முழுநினைவு இல்லை.
இதுதான் இரக்கமற்ற மிசா கொடுமைகளை தானும், தலைவரின் மகனான மு.கஸ்டாலின் உள்ளிட்டோரும் அனுபவித்ததை தனது டைரியில் ரத்தத்துளிகளால் சிட்டிபாபு எழுதியவை.
சிறை அதிகாரி, சிறை சூப்பிரன்டெண்ட் என்று சொல்லக்கூடிய கண்காணிப்பாளர் வித்யாசாகர் கொடுமையின் உச்சத்திற்கே சென்றார். மிசா கைதிகளை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினார் தெரியுமா? அதுவும் யாரை வைத்து என்று கேட்டால், சிறையிலிருக்கக்கூடிய ஆயுள் கைதிகளை வைத்து வெறியாட்டத்தை நடத்தினார்.
ஒரு கொலையைச் செய்து விட்டு அந்தக் கொலைக்கான தண்டனை, அந்தக் குற்றத்திற்கான தண்டனை பெற்றவர்கள், ஆயுள் முழுவதும் சிறையிலே கழிக்க வேண்டும். பிறகு அவர்களின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு 20 வருடம் அல்லது 30 வருடம் கழித்து அவர்களை விடுதலை செய்வார்கள். அப்படிப்பட்டவர்களைக் கொண்டு மிசா கைதிகளை தடியடியால் தாக்கக்கூடிய அந்தக் கொடுமையான சம்பவங்களை எல்லாம் நடத்தினார்கள்.
அப்போது முக்கியமாக எதைக் கையாண்டார்கள் என்று கேட்டால், “தி.மு.க.விலிருந்து விலகி விட்டோம், எங்களுக்கும் தி.மு.க.விற்கும் சம்மந்தம் இல்லை. என்று எழுதிக் கொடுக்க வேண்டும், கையெழுத்துப் போட வேண்டும்” என்று மிரட்டினார்கள். ஆனால் அந்த மிரட்டல், அச்சுறுத்தலுக்கு எல்லாம் அஞ்சுவார்களா கலைஞரின் தம்பிகள்! உணவு வேளைகளில் சிறைக் கொட்டடிகள் திறக்கப்பட்டன. அப்போது முரசொலி மாறன், ஸ்டாலின், சிட்டிபாபு, நீல நாராயணன், சிட்டிபாபு சந்தித்து பேசுவார்கள். எக்காரணம் கொண்டும் மன்னிப்புக் கடிதம் எழுதித்தரப் போவதில்லை என்ற உறுதியின் முன்னணியில் இருந்தார் மு.க.ஸ்டாலின்.
இதனை தொடர்ந்து மிசா விசாரணை கமிஷன் அந்த ஆண்டு வெளி வந்த முரசொலி இதழில் என்று மிசாவில் கைதானவர்களின் பெயரை காண்பித்து எதிர் தரப்பினர்கள் நம்பவில்லை. அவர்கள் ஸ்டாலின் மிசாவை கையில் எடுத்தால் , திமுகவினர் சாவர்க்கரை கையில் எடுத்தனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு பயந்து மன்னிப்பு கடிதம் எழுதினார் என்று இந்த நாளில் ட்விட்டரில் போர் நடந்த வண்ணமே தான் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *