

ராஜபாளையம் நகராட்சி அழகை நகர் பகுதியில் சாலையின் நடுவில் இருக்கும் மின் கம்பங்களில் உள்ள வயர்கள் பஞ்சு ஏற்றி வந்த லாரி மீது வயர்கள் உரசியதால் மின் கம்பம் ஒடிந்து விபத்து 7மணி நேரத்திற்கு மேலாகியும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு பெரம்பலூரில் இருந்து முருகன் என்பவர் இப்பகுதியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலைக்கு பஞ்சு ஏற்றிவந்துள்ளார்.
இந்நிலையில் ராஜபாளையம் பகுதியில் பஞ்சு ஏற்றி வந்த நூற்பாலை என்பது சத்திரப்பட்டி அருகே உள்ள அட்டை மில் பகுதியில் இறக்குவதற்காக செல்லும்போது இந்நிலையில் மேம்பாலம் கீழே உள்ள சர்வீஸ் சாலை தோண்டப்பட்டு உள்ள நிலையில் அருகே உள்ள நகராட்சி 39 வது வார்டு அழகை நகர் பகுதி வழியாக குறுகலான தெரு பகுதி மின் கம்பங்கள் சாலையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.இப்பகுதி வழியாக செல்லக்கூடிய சிறிய வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றன. இப்பகுதி வழியாக பஞ்சு ஏற்றி வந்த லாரியை நுழைந்தபோது மின் வயர்கள் மற்றும் மின் கம்பங்கள் உரசி மின்கம்பம் ஒடிந்து வாகனத்தின் மேல் தொங்கி நிலையில் உள்ளது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஒடிந்த மின் கம்பத்தினை சரி செய்ய பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலத்திற்கு கீழ், முறையாக சர்வீஸ் ரோடு உடனடியாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அப்பகுதியில் மின் கம்பம் ஒடிந்ததால் பரப்பு காணப்பட்டது.

