

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அமைந்துள்ள வேட்டை வெங்கடேச பெருமாள் கோயில் அருகே செயல்படும் டாஸ்மாக் கடைக்கு முன்பாக புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும், குடி போதைக்கு அடிமையானவர்களுக்கு மீட்பு மையங்கள் மூலம் உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மது பானங்களை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட புதிய தமிழகம் கட்சியை சேர்ந்தவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
