• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மெஷினிடமே வித்தை காட்டிய மதுபோதை ஆசாமி..,

ByKalamegam Viswanathan

Mar 27, 2025

ஊது..ஊது, ஊது ஊது… டக்குனு எடுக்காதங்க… சார்.. பேச்சுதான் அதிகமாக ஒழுங்கா ஊத மாட்றங்களே!!! உஷ்…உஷ்… இப்டி ஊதுங்க என TRAIL காட்டிய போலிசார்- மது குடிப்பது போல டெஸ்ட் மெஷினில் ஜிப் ஜிப்பாய் இழுத்து BREATH ANALIZE மெஷினிடமே வித்தை காட்டிய மதுபோதை ஆசாமி.

மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய போதை நபரிடம் டெஸ்ட் எடுப்பதற்குள் பாடாய்பட்ட போக்குவரத்து காவல்துறையினர்

பைக்க மட்டும் செக் பண்ணாதங்க சார்.. கார்ல போறவங்களயும் செக் பண்ணுங்க சார் டிராபிக் போலிசாருக்கு கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்.

மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அரசு ராஜாஜி மருத்துவமனை சாலையில் மது போதையில் ஆட்டோ ஒட்டிய நபர் மூதாட்டி மீது மோதியது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்

இந்த விபத்து தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்ட நிலையில் மாநகர் பகுதிகளில் மதுபோதையில் வாகனம் ஓட்டினால் கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்

இதனையடுத்து மதுரை மாநகர் பகுதிகளில் போக்குவரத்து காவல்துறையினர் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிவதற்கான வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு மதுரை அழகப்பன் நகர் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மதுரை திருப்பரங்குன்றம் பிரதான சாலையில் திருப்பரங்குன்றத்தில் இருந்து பழங்காநத்தம் நோக்கிவந்த கார் திடிரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்து தடுப்புகம்பிளை உடைத்தெறிந்தபடி எதிர்புற சாலைக்கு சென்று நின்றது.

இதனையடுத்து அங்கு பணியில் இருந்தபோக்குவரத்து காவல் பணியில் இருந்த எஸ் எஸ் ஐ கருப்பு துரிதமாக செயல்பட்டு போக்குவரத்தை உடனடியாக நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து தெற்கு போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன் விசாரணை நடத்தினர்.

இதில் தடுப்புக முழுவதுமாக உடைந்து நொறுங்கியதோடு, நல்வாய்ப்பாக வாகனங்கள் வராத நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. காரை மீட்டு போக்குவரத்தை சரிசெய்தனர். பின்னர் காரை ஓட்டிவந்த நபரை அழைத்துவந்து விசாரணை நடத்தியபோது அதீத மதுபோதையில் இருந்த அந்த நபரின் பெயர் சிவா என்பதும் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்த முயன்றபோது மதுபோதையால் கீழே கீழே விழுந்து விழுந்து எந்திரிக்க காவல்துறையினரே பாடாய்பட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் அந்த நபர் மதுபோதையின் அளவீடு குறித்து பார்ப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் Breath Analizer மூலமாக டெஸ்ட் எடுக்க அழைத்து ஊத சொன்ன போது பல தடவை கூறியும் மதுபோதையில் இருந்த அந்த நபர் சரியாக ஊதாத நிலையில் போக்குவரத்து காவல்துறையினரே ஒரு கட்டத்தில் டயர்ட் ஆகிவிட்டதோடு் காவல்துறையினரின் பொறுமையை சோதிக்கும் வகையில் நடந்துகொண்டார்.

பின்னர் வடிவேலு காமெடியில் பஸ்சை தள்ளு தள்ளு என சொல்வது போல போக்குவரத்து காவல்துறையினரும் …. ஊது..ஊது, ஊது ஊது…என கூறிக்கொண்டே ஏய் டக்குனு எடுக்காதங்க… சார்.. என கூற.. அவரும் ஊதவே இல்லை.. உங்கட்ட பேச்சுதான் அதிகமாக ஒழுங்கா ஊத மாட்றங்களே!!! என கூறிக்கொண்டே கெஞ்சிய போக்குவரத்து காவல்துறையினர. உஷ்…உஷ்… இப்டி ஊதுங்க என மதுபோதை ஆசாமியின் கையை பிடித்து ஊதி TRAIL காட்டியபோதும் அவர் உறுப்படியாக ஊதவில்லை,

அப்போது மது குடிப்பது போல Breath Analaizer மெஷினில் ஜிப் ஜிப்பாய் இழுத்து வித்தை காட்டினார் மதுபோதை ஆசாமி .

என்னய்யா பாடா படுத்துற கூறி மிகப்பெரிய போராட்டத்திற்கு பின்னர் சர்றென்று ஊதிய மதுபோதை இருப்பதிலேயே அதிக அளவு காட்டியதால் போலீசாரே அதிர்ந்து போனார்கள் பாயிண்ட் அளவிற்கு அதீத மதுபோதையில் இருப்பது தெரியவந்த நிலையில் அபராதம் விதித்தோடு விபத்தை ஏற்படுத்தியாகவும் வழக்குப்பதிவு செய்தனர்

மது போதையில் வந்த நபர் காரை கட்டுப்பாட்டை மீறி ஓட்டியதில் சாலை நடுவே தடுப்பில் இருந்த பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான புதிய கம்பிகள் உடைந்து நொறுங்கியது. மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு போக்குவரத்து காவற்துறையினரையும், BREATH ANALIZER மெஷினையும் திணறடித்த போதை நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இது போன்ற மதுபோதையில் பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் மீது அவர்களிடம் இருந்து அதற்கான கட்டணத்தை வசூல் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாநகரில் மது போதையில் வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையை மீறியும் இரவு நேரங்களில் அதீத மதுபோதையில் வாகனங்களை ஒட்டி விபத்தை ஏற்படுத்தும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது

ஒயின்ஷாப் முன்பாகவே நின்றுகொண்டு ஒயின்ஷாப் சென்றுவிட்டு பைக்கில் வருபவர்களை மட்டும் வாசலிலயே பிடித்து Drunk and Drive கணக்கு காட்டும் போக்குவரத்து காவல்துறையினர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சூர்யாநகர் பகுதியில் காரை அதிகவேகமாக ஓட்டிசென்று உணவகத்தில் புகுந்த விபத்தில் சமையல்மாஸ்டர் மீது எண்ணைய் கொட்டி விபத்து ஏற்பட்டது போன்ற சம்பவங்களும் தொடர்கதையாகிவருவதால் தனியார் பார்களிலும், மதுபான கடைகளிலும் இருந்து நன்கு மது அருந்திவிட்டு கார் போன்ற சொகுசு வாகனங்களில் செல்பவர்களை கண்டு கொள்வதில்லை, கார் போன்ற வாகனங்களில் மதுபோதையில் விபத்து ஏற்படுத்தினால் மிகப்பெரிய உயிரிழப்புகளும் பாதிப்பு ஏற்படும் என்பதால் சொகுசு கார்களையும், பார்களிலும் முன்பாகவும் வாகன தணிக்கையை மேற்கொண்டால் தான் விபத்துகளை குறைக்க இயலும் என்பதே மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.